Skip to content

உம்மை நினைக்கும் – Ummai Ninaikkum pothu

உம்மை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் மகிழுதையா நன்றி பெருகுதையா

1. தள்ளப்ட்ட கல்நான்
எடுத்து நிறுத்தினீரே
உண்மை உள்ளவன் என்று கருதி
ஊழியம் தந்தீரையா

நன்றி நன்றி ராஜா
நன்றி இயேசுராஜா

2. பாலை நிலத்தில் கிடந்தேன்
தேடி கண்டுபிடித்தீர்
கண்ணின் மணிபோல காத்து வந்தீர்
கழுகு போல் சுமக்கின்றீர்

3. பேரன்பினாலே என்னை
இழுத்துக் கொண்டீர்
பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர்
பிள்ளையாய் தெரிந்துகொண்டீர்

4. இரவும் பகலும் கூட
இருந்து நடத்துகின்றீர்
கலங்கும் நேரமெல்லாம் கரம்நீட்டி – என்
கண்ணிர் துடைக்கின்றீர்

5. உந்தன் துதியைச் சொல்ல
என்னை தெரிந்து கொண்டீர் – உம்
உதடுகளைத் தினம் திறந்தருளும்
புது ராகம் தந்தருளும்

6.சிநேகம் பெற்றேன் ஐயா
கனம் பெற்றேன் ஐயா
உந்தன் பார்வைக்கு அருமையானேன்
உம் ஸ்தினாதிபதியானேன்