Skip to content

பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே

பல்லவி
பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே
மங்கிப்போன மனம் புது வாழ்வில் மலர்ந்திடுதே
சரணங்கள்
1. தீயவர் திருடரும், கொடியவர் கொலைஞரும்
இயேசுவில் மாற்றம் பெற்றார்
மாறிய மனதுடன் மங்கள வாழ்விற்கு
அழைக்கிறார் – ஓடியே வா
2. தேவனின் ஆவியால் விடுதலை வாழ்வினை
பெற்றவர் பலருமுண்டு
இயேசு மகா இராஜன் உன்னைத் தான் அழைக்கிறார்
நம்பி நீ ஓடியே வா
3. கிருபையின் நாட்களைத் தயவுடன் ஏற்றிடக்
கனிவுடன் வேண்டுகிறோம்
வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம் நீ
அழைக்கிறார் – ஓடியே வா