Aabirahamai Aasirvathitha Lyrics– ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

Aabirahamai Aasirvathitha Lyrics – ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

1. கல்லின் மனைபோலக் கணவனும்
இல்லின் விளக்கெனக் காரிகையும்
என்றும் ஆசிபெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே! வாழவே!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை யெழுப்பி இங்கிதமா யென்றும்
இணைந்து வாழவே – இணைந்து வாழவே

2. அன்பும் அறனும் அங்கோங்குமெனின்
பண்பும் பயனும் உண்டாமே
இன்பமோடே அங்ஙன மென்றும் வாழப்பாரும்
வாழவே! வாழவே! வாழவே!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!
என்றுமிதே இன்பம் கொண்டிவன் வாழவே
நற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்
நயந்து வாழவே – நயந்து வாழவே

3. உள்ளம் விரும்பிய செல்வமுடன்
உத்தமச் சேய்களையே தாரும்
நல்ல கீர்த்திகொண்டு நாளும் வாழப் பாரும்
வாழவே! வாழவே! வாழவே!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!
ஐயமது கொள்ளாது அன்பினிற் கூடியே
வையகந்தனில் வல்லபிதா உம்மை
வணங்கி வாழவே – வணங்கி வாழவே

Aabirahamai Aasirvathitha – ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே Lyrics in English

Aabirahamai Aasirvathitha Lyrics – aapirakaamai aaseervathiththa aanndavaa arulumae

aapirakaamai aaseervathiththa aanndavaa arulumae

1. kallin manaipolak kanavanum
illin vilakkenak kaarikaiyum
entum aasipettu inithu vaalavae
vaalavae! vaalavae! vaalavae!
entum aasipettu innainthu vaalavae!
illaramaam inpa nallarach solaiyil
innisai yeluppi ingithamaa yentum
innainthu vaalavae – innainthu vaalavae

2. anpum aranum angaோngumenin
pannpum payanum unndaamae
inpamotae angngana mentum vaalappaarum
vaalavae! vaalavae! vaalavae!
entum aasipettu innainthu vaalavae!
entumithae inpam konntivan vaalavae
narpukalatainthu nannparudan suttam
nayanthu vaalavae – nayanthu vaalavae

3. ullam virumpiya selvamudan
uththamach seykalaiyae thaarum
nalla geerththikonndu naalum vaalap paarum
vaalavae! vaalavae! vaalavae!
entum aasipettu innainthu vaalavae!
aiyamathu kollaathu anpinir kootiyae
vaiyakanthanil vallapithaa ummai
vanangi vaalavae – vanangi vaalavae

song lyrics Aabirahamai Aasirvathitha – ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

Try Amazon Fresh

Scroll to Top