Aadhi Thiru Vaarthai Thiviya – Tamil Christian Song ( Christmas Special )

Aadhi Thiru Vaarthai Thiviya – Tamil Christian Song ( Christmas Special )

1. ஆதி திரு வார்த்தை திவ்விய
அற்புத பாலனாகப் பிறந்தார் – 2
ஆதந்தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட – 2
ஆதிரையோரை யீடேற்றிட
மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து
மரியக் கன்னியிட முதித்து – 2
மகிமையை மறந்து தமை வெறுத்து- 2
மனுக்குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர் மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ நன்மைச் சொரூபனார் ரஞ்சிதனார்.

2. தாம் தாம் தன்னர வன்னர
தீம் தீம் தீமையகற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ ஷமென சோபனம் பாடவே
இங்கிர்த இங்கிர்த இங்கிர்த நமது இருதயத்திலும் எங்கும் நிறைந்திட

3. அல்லேலூயா! சங்கீர்த்தனம்
ஆனந்த கீதங்கள் பாடவே – 2
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீக்கிட – 2
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார்
தாம் தாம் தன்னர வன்னர
தீம் தீம் தீமையகற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ ஷமென சோபனம் பாடவே
இங்கிர்த இங்கிர்த இங்கிர்த நமது இருதயத்திலும் எங்கும் நிறைந்திட

Trip.com WW

Scroll to Top