Aadhiyilae Jalathin Mealae – ஆதியிலே ஜலத்தின் மேலே

ஆதியிலே ஜலத்தின் மேலே அசைவாடி இருந்தவரே
என்னை மீட்டு உம்மில் சேர்க்க விரைந்தோடி வந்தவரே

என்னை தேடோடி வந்த பாதம்
முத்தம் செய்ய வந்திருக்கேன்
மார்போடு அணைத்த கைகள்
முத்தம் செய்ய வந்திருக்கேன்
கடல் மீது நடந்த பாதம்
முத்தம் செய்ய வந்திருக்கேன்
கண்ணீரைத் துடைச்ச கைகள்
முத்தம் செய்ய வந்திருக்கேன்

பெத்தலகேம் ஊரினிலே மாட்டுத் தொழுவத்தினிலே
கன்னி மரி வயிற்றினிலே பாலனாகப் பிறந்தவரே

மந்தை ஆயர்களுடனே
முத்தம் செய்ய வந்திருக்கேன்
நட்சத்திரம் பின்பற்றி
முத்தம் செய்ய வந்திருக்கேன்
சாஸ்திரிகளுடனே
முத்தம் செய்ய வந்திருக்கேன்
பொன் தூபவர்க்கங்களை அள்ளிக் கொண்டு
முத்தம் செய்ய வந்திருக்கேன்

எங்கள் பாவம் சாபங்களை அடியோடு நீக்கிடவே
எங்கள் எல்லோரையும் இரட்சிக்கவே மரித்துயிர்க்க வந்தவரே
எங்கள் பாவம் சாபங்களை அடியோடு நீக்கிடவே
எங்கள் எல்லோரின் பிரதிநிதியாக மரித்துயிர்க்க வந்தவரே

எந்தன் பாவம் போக்க வந்தவரை
முத்தம் செய்ய வந்திருக்கேன்
சாபம் தீர்க்க வந்தவரை
முத்தம் செய்ய வந்திருக்கேன்
நீதிமான் என்றவரை
முத்தம் செய்ய வந்திருக்கேன்
ஓயாமல் நினைப்பவரை
ஓயாமல் முத்தம் செய்ய வந்தேன்

Scroll to Top