Aalayam Amaithida Aruleentha Deva Lyrics – ஆலயம் அமைத்திட அருளீந்த தேவா

Aalayam Amaithida Aruleentha Deva Lyrics – ஆலயம் அமைத்திட அருளீந்த தேவா

இராகம்: தன்யாசி தாளம்: ஆதி
‘எத்தனை திரள் என் பாவம்’ என்ற மெட்டு

பல்லவி

ஆலயம் அமைத்திட அருளீந்த தேவா
ஆசியளித்திட வா

அனுபல்லவி

அன்பன் சாலொமோன் அன்று அமைத்திட்ட ஆலயம்
பொங்கும் நின் கிருபையால் தங்கி வழிந்தது போல்

1. பாவிகள் உந்தனின் பதமலர் பணிந்துமே
பாவமதை போக்கிட
நாதனே என்றும் உன் நாம மகிமையால்
நாடி வருவோர்க்கு நலமே புரிந்திட – ஆலயம்

2. வேண்டுதல் செய்வோரின் வேதனை துடைத்திட
வேண்டும் வரம் அருள்வாய்;
வேத முதல்வனே விண்ணவர் நன் கோனே
வேதியர் நின்மறை பேதையர்க்(கு) ஓதிட – ஆலயம்

3. உன்னத தேவனே உயர்மறை நாதனே
உள்ளம் உன் ஆலயமாய்,
நன்னயமுடன் நாளும் நாடிப்படைத்தே ஜீவ
நன்மையின் பாதையில் நலமுடன் ஏகிட – ஆலயம்

4. பக்தியோடுந்தன் பதம் பணிந்துமே போற்றிட
உத்தம மனம் அருள்வாய்;
சித்தம் சிதறாமலே சிந்தையடக்கி உந்தன்
முக்தி பெறும் நெறியில் நித்தமும் நிலைத்திட – ஆலயம்

Aalayam Amaithida Aruleentha Deva – ஆலயம் அமைத்திட அருளீந்த தேவா Lyrics in English

iraakam: thanyaasi thaalam: aathi
‘eththanai thiral en paavam’ enta mettu

pallavi

aalayam amaiththida aruleentha thaevaa
aasiyaliththida vaa

anupallavi

anpan saalomon antu amaiththitta aalayam
pongum nin kirupaiyaal thangi valinthathu pol

1. paavikal unthanin pathamalar panninthumae
paavamathai pokkida
naathanae entum un naama makimaiyaal
naati varuvorkku nalamae purinthida – aalayam

2. vaennduthal seyvorin vaethanai thutaiththida
vaenndum varam arulvaay;
vaetha muthalvanae vinnnavar nan konae
vaethiyar ninmarai paethaiyark(ku) othida – aalayam

3. unnatha thaevanae uyarmarai naathanae
ullam un aalayamaay,
nannayamudan naalum naatippataiththae jeeva
nanmaiyin paathaiyil nalamudan aekida – aalayam

4. pakthiyodunthan patham panninthumae pottida
uththama manam arulvaay;
siththam sitharaamalae sinthaiyadakki unthan
mukthi perum neriyil niththamum nilaiththida – aalayam

song lyrics Aalayam Amaithida Aruleentha Deva – ஆலயம் அமைத்திட அருளீந்த தேவா

Try Amazon Fresh

Scroll to Top