Skip to content

Aamaithi Anbin Swami – அமைதி அன்பின் ஸ்வாமியே

1. அமைதி அன்பின் ஸ்வாமியே
இப்பாரில் யுத்தம் மூண்டதே
விரோதம் மூர்க்கம் ஓய்ந்திடும்
பார் அமர்ந்தும், போர் நீக்கிடும்.
2. எம் முன்னோர் காலம் தேவரீர்
செய்த மா கிரியை நினைப்பீர்
எம் பாவம் நினையாதேயும்
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.
3. நீர்தாம் சகாயம் நம்பிக்கை
கடைப்பிடிப்போம் உம் வாக்கை
வீண் ஆகாதே யார் வேண்டலும்
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.
4. விண் தூதர் தூயோர் அன்பினில்
இசைந்தே வாழும் மோட்சத்தில்
உம் அடியாரைச் சேர்த்திடும்
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.