1. ஐயரே, நீர் தங்கும் என்னிடம்,
ஐயரே, நீர் தங்கும்!-இப்போது
அந்திநேரம் பொழு தஸ்தமித்தாச்சே,
ஐயா, நீர் இரங்கும்.
2. பகல்முழுவதும் காத்தீர், சென்ற
பகல் முழுவதும் காத்தீர்;-தோத்திரம்!
பரமனே, இந்த இரவிலும் வாரும்,
பாவியை நீர் காரும்!
3. தங்கா தொருபொருளும் என்னிடம்,
தங்கா தொருபொருளும்;-யேசு
தற்பரனே, நீர் ஒருவரே யென்னில்
தங்கித் தயைபுரியும்.
4. உயிரே துமையன்றிப் பாவிக்
குயிரே துமையன்றி?-என்றன்
உடல் உயிர் உம்மால் உய்கிறதையா,
உத்தமனே, தங்கும்.
5. நீர் தங்கிடும் வீட்டில், யேசுவே,
நீர் தங்கிடும் வீட்டில்,-எல்லாம்
நிறைவே குறைவுண்டாமோ, கர்த்தா?
நின்னை விடமாட்டேன்.
6. என்பாவம் மனியும், இறையே,
என்பாவம் மனியும்;-அப்போ
எளியேன் உம்மோ டயர்வேன், இரவில்
எனக்கோர் திகிலேது?
7. எனக்கு நீர்காவல், என்றும்
எனக்கு நீர்காவல்;- என்றன்
இனத்தார் ஜனத்தார் எளியோர் வலியோர்
எல்லாவர்க்குங் காவல்.
8. உம்மோடே படுப்பேன், ஐயா,
உம்மோடே படுப்பேன்;-இரவில்
உம்மோ டயர்வேன், சேதமில்லாமல்
உம்மோ டெழுந்திருப்பேன்.
Aiyyarae Thangum Ennidam – ஐயரே நீர் தங்கும் என்னிடம் Lyrics in English
1. aiyarae, neer thangum ennidam,
aiyarae, neer thangum!-ippothu
anthinaeram polu thasthamiththaachchaே,
aiyaa, neer irangum.
2. pakalmuluvathum kaaththeer, senta
pakal muluvathum kaaththeer;-thoththiram!
paramanae, intha iravilum vaarum,
paaviyai neer kaarum!
3. thangaa thoruporulum ennidam,
thangaa thoruporulum;-yaesu
tharparanae, neer oruvarae yennil
thangith thayaipuriyum.
4. uyirae thumaiyantip paavik
kuyirae thumaiyanti?-entan
udal uyir ummaal uykirathaiyaa,
uththamanae, thangum.
5. neer thangidum veettil, yaesuvae,
neer thangidum veettil,-ellaam
niraivae kuraivunndaamo, karththaa?
ninnai vidamaattaen.
6. enpaavam maniyum, iraiyae,
enpaavam maniyum;-appo
eliyaen ummo dayarvaen, iravil
enakkor thikilaethu?
7. enakku neerkaaval, entum
enakku neerkaaval;- entan
inaththaar janaththaar eliyor valiyor
ellaavarkkung kaaval.
8. ummotae paduppaen, aiyaa,
ummotae paduppaen;-iravil
ummo dayarvaen, sethamillaamal
ummo delunthiruppaen.
song lyrics Aiyyarae Thangum Ennidam – ஐயரே நீர் தங்கும் என்னிடம்
@songsfire
more songs Aiyyarae Thangum Ennidam – ஐயரே நீர் தங்கும் என்னிடம்
Aiyyarae Thangum Ennidam