Anbe kalvaari Anbe – அன்பே கல்வாரி அன்பே

அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா
1. தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் எங்கள்
பரிகார பலியானீர்
2. காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே
3. அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி
நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதய்யா
4. நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதய்யா
மனிதர்கள் மூழ்கணுமே எல்லா
மறுரூபம் ஆகணுமே

Scroll to Top