Arputharaam Yesu Devan – அற்புதராம் இயேசு தேவன் SONG LYRICS

அற்புதராம் இயேசு தேவன்
வல்லமை வெளிப்படுதே
சுகமடைய பெலன் பெறவே
அவரையே அண்டிடுவோம் (2)

அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்

வியாதிகள் யாவுமே நீங்கிடுமே தழும்பினால் சுகமே தந்திடுமே (2)
வல்லமையே வெளிப்படுதே
பிணிகள் யாவும் நீங்கிடுதே (2)

அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்

நொருங்குண்ட இதயம் குணப்படுத்த வல்லமை இன்றே வெளிப்படுதே (2)
காயங்களை ஆற்றிடுவார்
எண்ணை ரசமும் வழிந்திடுதே (2)

அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்

பாவத்தில் அமிழ்ந்த யாவரையும் தூக்கியே நிறுத்தியே காத்தனரே (2)
ஆத்துமாவை குணப்படுத்தி
அகமதில் மகிழ்ச்சி அளித்தனரே (2)

அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்

https://www.youtube.com/watch?v=qp9LS3Ayq5k
Scroll to Top