Skip to content

Arunothayam Ezhunthiduvom – அருணோதயம் எழுந்திடுவோம்

1. அருணோதயம் எழுந்திடுவோம்
பரனேசுவைத் துதிப்போம்
அருணோதயம் பரமானந்தம்
பரனோடுறவாடவும்.

2. இதைப் போன்றொரு அருணோதயம்
எம்மைச் சந்திக்கும் மனமே
ஆ! என்னானந்தம்! ஜோதி சூரியனாம்
எந்தன் நேச ரெழும்பும் நாள்.

3. நன்றியாலுள்ளம் பூரித்திடுதே
அன்னையாம் மேசு காருண்யம்
ஒவ்வொன்றா யிதைத் தியானம் செய்யவும்
எவ்வாறு மேற்ற சந்தர்ப்பம்

4. போன ராவினில் ஜீவித்தோர் பலர்
லோகம் விட்டுமே போய் விட்டார்
ஆயினும் நமக்கிந்தத் தினமும்
தந்த நேசரைத் துதிப்போம்

5. நானிர் வாணியாய் வந்த வண்ணமே நிர்
வாணியா யங்கு போகின்றேன்,
கூடச் செல்லவும் பூவிலொன்றுண்டோ?
நாடி போமந்த நாட்டிற்கே

6. ஆயென் நேசரின் அன்பை யெண்ணவும்
ஆனந்தம் பரமானந்தம்
ஆயென் நேசரோர் நவ வான் புவி
தானஞ் செய்ததே ஆனந்தம்

7. பார்! தன் நேசரின் மார்பில் சாய்ந்தேகும்
யாவரிள் இவ் வனாந்திரம்?
எந்தன் நேசரின் கூடச் செல்கிறேன்
சொந்த ராஜ்யத்தில் சேரவும்

8. கொண்டல் மோதும் வறண்ட நாடிதில்
நண்பரே கைவிடாதேயும்!
ஆசையோடு நான் வாறே னென் துக்கம்
பாசமா யங்கு தீர்த்திடும்