Azhaitheerae Yesuvae – அழைத்தீரே இயேசுவே

அழைத்தீரே இயேசுவே
அன்போடே என்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே

1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
என் துயர தொனியோ இதை யார் இன்று கேட்பார்
என் காரியமாக யாரை அழைப்பேன்
என்றீரே வந்தேனிதோ

2. எந்தன் ஜெபத்தை கேட்டிடுமே
ஏழை ஜனத்தை மீட்டிடுமே
எந்தன் பிதா சித்தமே என் போஜனமும் அதுவே
என் பிராணனைக் கூட நேசித்திடாமல்
என்னையும் ஒப்படைத்தேன்

3. பாக்கியமான சேவையிதே
பாதம் பணிந்தே செய்திடுவேன்
ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகைவரை
அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து
ஆண்டவரை அடைவேன்

Scroll to Top