Baktharudan Paaduvem Paramasabai Lyrics – பக்தருடன் பாடுவேன்

Baktharudan Paaduvem Paramasabai Lyrics – பக்தருடன் பாடுவேன்

பக்தருடன் பாடுவேன் – பரமசபை
முக்தர்குழாம் கூடுவேன்

அனுபல்லவி

அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்
இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் — பக்த

சரணங்கள்

1. அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே
அன்பர் என் இன்பர்களும்,
பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்
என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் — பக்த

2. இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க் – கு
அகமும் ஆண்டவன் அடியே,
சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,
இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே — பக்த

3. தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்
சேயன் கண் மூடுகையில்,
பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி,
தூயா, திருப்பாதத் தரிசனம் தந்தருள் — பக்த

Baktharudan Paaduvem Paramasabai Lyrics in English

paktharudan paaduvaen – paramasapai

muktharkulaam kooduvaen

anupallavi

anpaal annaikkum arulnaathan maarpinil

inpam nukarnthilaippaaruvor kooda naan — paktha

saranangal

1. anpu aliyaathallo avvannnamae

anpar en inparkalum,

ponnatip poomaanin puththuyir pettathaal

ennudan thanguvaar ennnnooli kaalamaay — paktha

2. ikamum paramum onte ivvatiyaark – ku

akamum aanndavan atiyae,

sukamum narselvamum suttamum uttamum,

ikalillaa ratchakan inpap porpaathamae — paktha

3. thaayin thayavutaiyathaayth thamiyan nin

seyan kann moodukaiyil,

paayolip pasum ponnae, pakthar sinthaamanni,

thooyaa, thiruppaathath tharisanam thantharul — paktha

song lyrics Baktharudan Paaduvem Paramasabai

@songsfire
more songs Baktharudan Paaduvem Paramasabai – பக்தருடன் பாடுவேன் பரமசபை
Baktharudan Paaduvem Paramasabai

Exit mobile version