Skip to content

Deivaasanamun Nirpeerae – தெய்வாசனமுன் நிற்பீரே

1. தெய்வாசனமுன் நிற்பீரே
சேவகத் தூதர் சேனையே
பண் மீட்டி விண்ணில் பாடுவர்
பொன்முடி மாண்பாய் சூடுவர்.
2. சன்னிதி சேவை ஆற்றுவர்
இன்னிசை பாடிப் போற்றுவர்
நாதரின் ஆணை ஏற்றுமே
மேதினியோரைக் காப்பரே
3. நாதா, உம் தூதர் நாளெல்லாம்
நடத்திட நற்பாதையாம்
மாலை இராவின் தூக்கத்தில்
சீலமாய்க் காக்க பாங்கினில்
4. எத்தீங்கு பயம் சேதமே
கர்த்தா, தொடாது எங்களை
வாணாள் முடிந்தும் பாதமே
மாண்பாகச் சேர்வோம் தூதரை.