Dhaaveedhin Vamsathil song lyrics

தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில்
மரியாளின் மைந்தனாக யோசேப்பின் மகனாக
தேவ குமாரன் இயேசு கிறிஸ்து குழந்தையாக
இவ்வுலகில் பிறந்து விட்டாரே (2)

போற்றி போற்றி புகழ்வோம்
பாடி பாடி துதிப்போம் (2)

சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லையே
முன்னணையில் குழந்தையை வைத்தார்களே
மனித குமாரன் மெய்யான தேவன்
ஏழையின் தோற்றத்தில் அவதரித்தாரே (2)

போற்றி போற்றி புகழ்வோம்
பாடி பாடி துதிப்போம் (2)

அவர் பிறப்பை தூதன் அறிவித்தாரே
சந்தோஷத்தின் செய்தியை தெரிவித்தாரே
தூதர்கள் தோன்றி துதிகளை பாடி
உன்னதத்தில் மகிமை என சொன்னார்களே (2)

போற்றி போற்றி புகழ்வோம்
பாடி பாடி துதிப்போம் (2) – தாவீதின்

Scroll to Top