
ellam yesuve enakku ellam yesuve song lyrics – எல்லாம் இயேசுவே

ellam yesuve enakku ellam yesuve song lyrics – எல்லாம் இயேசுவே
எல்லாம் இயேசுவே
எனக்கெல்லாம் இயேசுவே
தொல்லை மிகு இவ்வுலகில்
துணை இயேசுவே
1. ஆயனும் சகாயனும்
நேயனுமுபாயனும்
நாயனும் எனக்கன்பான
ஞானமணவாளனும்
2. தந்தை தாயினம் ஜனம்
பந்துள்ளோர் சிநேகிதர்
சந்தோட சகலயோக
சம்பூரண பாக்யமும்
3. கவலையிலாறுதலும்
கங்குலிலென் ஜோதியும்
கஷ்ட நோய்ப் படுக்கையிலே
கை கண்ட ஒளஷதமும்
4. போதகப் பிதாவுமென்
போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங்
கூட்டாளியுமென் தோழனும்
5. அணியு மாபரணமும்
ஆஸ்தியும் சம்பாத்தியமும்
பிணையாளியும் மீட்பருமென்
பிரிய மத்தியஸ்தனும்
6. ஆன ஜீவ அப்பமும்
ஆவலுமென் காவலும்
ஞான கீதமும் சதுரும்
நாட்டமும் கொண்டாட்டமும்