எம்மாவு பயணம் வாடிய பயணம் – Emmavoor Payanam Vaadiya payanam

Deal Score0
Deal Score0
எம்மாவு பயணம் வாடிய பயணம் – Emmavoor Payanam Vaadiya payanam

எம்மாவு பயணம் வாடிய பயணம் – Emmavoor Payanam Vaadiya payanam

எம்மாவு பயணம் வாடிய பயணம்
எருசலேம் பயணம் பாடுகள் பயணம்
எம்மாவு பயணம் வாடிய பயணம்
எருசலேம் பயணம் வெற்றியின் பயணம்
முகவாட்டம் எல்லாம் மாற்றுவார் இயேசு
அகவாட்டம் எல்லாம் அகற்றுவார் இயேசு

என் இதயத்தில் அகஒளி ஏற்றுவார் இயேசு
என் வாழ்க்கைப் பயணத்தில் பயணிப்பார் இயேசு
என் இதயத்தில் அகஒளி ஏற்றுவார் இயேசு
என் வாழ்க்கைப் படகிலே பயணிப்பார் இயேசு (2)

1.பாடுகள் வழிதான் மகிமையில் சேர்ப்பார்
சாவின் வழிதான் உயிர்ப்பினை அருள்வார்
ஆல்பாவும் ஒமேகாவும் ஆனவர் இயேசு
ஆதியும் அந்தமும் ஆனவர் இயேசு

  1. இருந்தவர் இருப்பவர் வருபவர் இயேசு
    இறப்பின் வழியாய் இறைமையில் இணைப்பார்
    என் உள்ளத்தின் மந்தத்தை மாற்றுவார் இயேசு
    என் அறிவின்மையை அகற்றுவார்
  2. ஆயன் தன் மந்தையைக் காப்பது போல
    ஆண்டவர் நம்மை காத்திடுவாரே
    நம்மை விட்டு விலகவும் மாட்டார்
    நம்மை என்றும் கைவிடமாட்டார்
  3. கல்வாரி பயணம் உயர்வின் பயணம்
    கடவுள் நம்மோடு பயணிக்கும் பயணம்
    கடைசி வரையிலும் நம்மோடு இருப்பார்
    கலக்கமும் திகிலும் மாறிடச் செய்வார்
    கடைசி வரையிலும் நம்மோடு இருப்பவர்
    கலக்கமும் திகிலும் மாறிடச்செய்பவர்

Emmavoor Payanam Vaadiya payanam song lyrics in english

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo