
En Aandava Ipporil song lyrics – என் ஆண்டவா இப்போரில்
Deal Score0

En Aandava Ipporil song lyrics – என் ஆண்டவா இப்போரில்
என் ஆண்டவா, இப்போரில் நான்
விழாது இம் பிரசன்னத்தால்
நெருங்கி என்னைத் தாங்கிடும்
நேராய் நடத்தும் உம் அன்பால்
என் ஆவல் என்றும் உம்மிலே
என்றாலும் என்னைச் சூழ்ந்திடும்
பிசாசு மாம்சம் லோகத்தால்
மாளாது பெலன் தந்திடும்
ஐயோ, நான் பெலவீனனே
ஓயாது வீழ்ந்து சாகின்றேன்
என் இயேசுவே என் ஜீவனே
உன் பாதம் தஞ்சம் அண்டினோம்
நற் போராட்டம் போராடிட
ஓட்டத்தை உம்மில் முடிக்க
விண் கிரீடம் பெற்று பாடிட
விடாது தாங்கி நடத்தும்