
En idhayam Neer thangum song lyrics – என் இதயம் நீர் தங்கும்

En idhayam Neer thangum song lyrics – என் இதயம் நீர் தங்கும்
என் இதயம் நீர் தங்கும் ஸ்தலமாக வேண்டும்
உம் வார்த்தைகள் பதிக்கும் இடமாக வேண்டும் -2
உம்மை நேசிக்கிறேன் -4
என் உயிரினும் மேலாய் நேசிக்கிறேன்
முழு மனதோடு உம்மை நேசிக்கிறேன் -2 – என் இதயம்
என் இதய பலகையிலே
உம் சித்தம் எழுதனுமே
உமது வார்த்தையிலே
உம் சித்தம் விளங்கிடுதே
என் இதய பலகையில்
உம் சித்தம் எழுதனுமே
உமது பிரமாணத்திலே
சித்தம் விளங்கிடுதே
என் இதயம் முழுதும் என்றும் உமக்காய்
உடன்படிக்கை செய்தேன் – என் இதயம்
கல்லான சிலைகளுக்குள்
நீர் என்றும் இருப்பதில்லை
கல்லான இதயத்திலே
நீர் என்றும் இருப்பதில்லை
கல்லான என் இதயம் சதையாக
மாற்றினீர் மகிமையின் ஸ்தலமானதே
மகிமையின் ஸ்தலமானதே