Skip to content

En Nenjam Nonthu – என் நெஞ்சம் நொந்து

1. என் நெஞ்சம் நொந்து காயத்தால்
அவஸ்தைப்படவே,
குத்துண்ட மீட்பர் கரத்தால்
அக்காயம் ஆறுமே.
2. தீராத துக்கம் மிஞ்சியே
நான் கண்ணீர் விடினும்
நோவுற்ற இயேசு நெஞ்சமே
மெய் ஆறுதல் தரும்.
3. என் மனஸ்தாபத் தபசால்
நீங்காத கறையும்
வடிந்த இயேசு ரத்தத்தால்
நிவிர்த்தியாகிடும்.
4. என் மீட்பர் கரத்தால் சுகம்,
செந்நீரால் தூய்மையாம்
என் இன்பதுன்பம் அந்நெஞ்சம்
அன்பாய் உணருமாம்.
5. அக்கரம் நீட்டும், இயேசுவே
அவ்வூற்றைத் திறவும்;
குத்துண்ட உந்தன் பக்கமே
என்றன் அடைக்கலம்.