
Engum Nirantha Deivamae – எங்கும் நிறைந்த தெய்வமே
Deal Score0

Engum Nirantha Deivamae – எங்கும் நிறைந்த தெய்வமே
எங்கும் நிறைந்த தெய்வமே
ஏழை அடியார் பணிவாய்
துங்கவன் உந்தன் பாதமே
ஸ்தோத்தரிக்கின்றோம் ஏகமாய் .
உலக எண்ணம் நீங்கியே
உந்தனில் திட மனதாய்
நலமாய் உள்ளம் பொங்கியே
நாடித் துதிக்கச் செய் அன்பாய்.
கேட்டிடும் தெய்வ வாக்கியம்
கிருபையாய் மனதிலே
நாட்டிட நின் சலாக்கியம்
நாங்கள் நிறையச் செயகாலே
தூதர்கள் கூடிப் பாடிடும்
தூயர் உம்மை மா பாவிகள்
பாதம் பணிந்து வேண்டினோம்
பாலிப்பீர்! நாங்கள் ஏழைகள்