Enna En Aanantham

Faith Score0
Faith Score0

என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்
சொல்லக் கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே (2)
(என்ன என் ஆனந்தம்…….)

கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம் (2)
      (என்ன என் ஆனந்தம்…….)

பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே (2)
      (என்ன என் ஆனந்தம்…….)

அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்
அருளினதாலே
நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி
பகர வேண்டியதே (2)
      (என்ன என் ஆனந்தம்…….)

வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்
ஜெயக் கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனை ஸ்தோத்தரிப்போம் (2)
      (என்ன என் அனந்தம்…….)

Enna En Aanantham Lyrics in English

enna en aanantham enna en aanantham
sollak koodaathae
mannan kiristhu en paavaththai ellaam
manniththu vittarae (2)
(enna en aanantham…….)

kooduvom aaduvom paaduvom nantay
makil konndaaduvom
naatiyae nammaith thaetiyae vantha
naathanaip pottiduvom (2)
      (enna en aanantham…….)

paavangal saapangal kopangal ellaam
parikariththaarae
thaevaathi thaevan en ullaththil vanthu
thaettiyae vittarae (2)
      (enna en aanantham…….)

atchayan patchamaay iratchippai engaluk
arulinathaalae
nichchayam suvaamiyaip pattiyae saatchi
pakara vaenntiyathae (2)
      (enna en aanantham…….)

vennnangi ponmuti vaaththiyam mael veettil
jeyak kotiyudanae
mannnulakil vanthu vinnnulakil senta
mannanai sthoththarippom (2)
      (enna en anantham…….)

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo