Ennai Alaithavar Christian Song Lyrics

Ennai Alaithavar Christian Song Lyrics

Ennai Alaithavar Song Lyrics From Tamil Christian Song Sung By. Praiselin Stephen.

Ennai Alaithavar Christian Song Lyrics in Tamil

என்னை அழைத்த நல் நாதரே
முன் குறித்த நல் நேசரே (2)
தொலைந்த என்னையும் தேடி இரட்சித்தீர்
மரித்த என்னையும் உயிரோடு எழுப்பினீர்
அளவில்லா அன்பினால்
தயவுள்ள சித்ததால்

1. முன்னறிந்து என்னை நீர்
முன்குறித்து அழைத்ததால்
நீதிமான் ஆக்கியே
மகிமை படுத்தினீர்
மரணமோ ஜீவனோ
வேறெந்த சிருஷ்டியோ (2)
உம் அன்பில் இருந்தென்னை
பிரித்திடக் கூடுமோ?
நீர் தந்த இரட்சிப்பை
இழந்திடச் செய்யுமோ?

2. பரம அழைப்பு அதின்
பந்தயப் பொருளுக்காய்
பரிசுத்த நகரத்தின்
மேலான மகிமைக்காய்
இலக்கை நான் நோக்கியே
ஆவலாய்த் தொரடர்கிறேன் (2)
உம்மை நான் காணுவேன்
உம்மை போல் மாறுவேன்
உம்மை நான் அறிந்திட
வெளிச்சத்தில் நடக்கிறேன்

3. பெலத்தினாலும் அல்ல
என் ஆற்றலாலும் அல்ல
விருப்பத்தாலும் அல்ல
என் ஓட்டத்தாலும் அல்ல
உந்தன் சித்ததால்
உந்தன் இரக்கத்தால் (2)
எல்லாம் கூடிடும்
உம் வார்த்தையால் ஆகிடும்
தேவனால் கூடிடும்
ஆவியால் ஆகிடும்


#songsfire

Exit mobile version