Skip to content

Ennai marava yesu naatha – என்னை மறவா இயேசு நாதா song lyrics

என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்

வல்ல ஜீவ வாக்கு தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அருந்துணையே
பாதைக்கு நல்ல தீபம் இதே!

தாய் தன சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீர் அன்றோ உம உள்ளங்கையில்
வல்லவா எந்தன் புகழ் இடமே!

திக்கற்றோறாய் கைவிடேனே
கலந்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
நீர் அறியா யாதும் நேரிடா
என் தலை முடியும் எண்ணி நீரே!