Ennai Thedi Vanthu Naadi Vanthu Lyrics – என்னை தேடி வந்து நாடி வந்து

Ennai Thedi Vanthu Naadi Vanthu Lyrics – என்னை தேடி வந்து நாடி வந்து

என்னை தேடி வந்து நாடி வந்து என்னை தேற்றிடும் தேனமுதே எந்தன் பாவம் போக்க பசியை போக்க தன்னை உணவாய் தந்தவனே அன்பாய் வருவாய் என்னுள்ளே அமைதி தருவாய் மனதினிலே

வசந்தம் என்றும் என் வாழ்வில் வீச விடியல் என்றும் என் வாழ்வில் காண உலகிற்கு வந்தவரே நன்மை என்றும் என் வாழ்வில் நிறைய உண்மை என்றும் என் வாழ்வில் ஒளிர உணவான அருமருந்தே அன்பாய் வருவாய் என்னுள்ளே அமைதி தருவாய் மனதினிலே

புதுமை என்றும் என் வாழ்வில் பெருக இனிமை என்றும் என் வாழ்வில் தொடர உறவான நல் உணவே அன்பு என்றும் என் வாழ்வில் நிலவ அருளை என்றும் என் வாழ்வில் காண அன்பாய் ஒளிர்பவரே அன்பாய் வருவாய் என்னுள்ளே அமைதி தருவாய் மனதினிலே

https://www.youtube.com/watch?v=BvqBkG8To3U
Scroll to Top