Skip to content

JILLENA KULIR KAATRU ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது song lyrics

ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது
நம் மேசியா மண்ணில் உதித்தார்-2

1.நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய்
சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே
வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே
அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே-2

மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே
விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர்- 2

2.மானிடரின் பாவரோகம் மாற்றிடவே
மா ஜோதி மானிடரானார்
உன்னை மீட்க தம்மை பலியாக தந்த
அவர் அன்பிற்கு இணையில்லையே-2

நாசரேத்திலோர் நன்மை பிறந்ததே
நம்பினோர்க்கெல்லாம் அது நன்மை அளித்ததே-2

ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது
நம் மேசியா மண்ணில் உதித்தார்-2