Kaanaga Pathai Kadum Malaiyum – கானக பாதை காடும் மலையும்

Deal Score0
Deal Score0
Kaanaga Pathai Kadum Malaiyum – கானக பாதை காடும் மலையும்

Kaanaga Pathai Kadum Malaiyum – கானக பாதை காடும் மலையும்

கானக பாதை காடும் மலையும்
காரிருளே சூழ்ந்திடினும்
மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும்
வேகம் நடந்தே முன் செல்லுவாய்

பயப்படாதே கலங்கிடாதே
பாரில் இயேசு காத்திடுவார்
பரம கானான் விரைந்து சேர்வாய்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய்

எகிப்தின் பாவ வாழ்வை வெறுத்தே
இயேசுவின் பின்னே நடந்தே
தூய பஸ்கா நீ புசித்தே
தேவ பெலனால் முன் செல்வாய்

கடலைப் பாரும் இரண்டாய் பிளக்கும்
கூட்டமாய் சென்றே கடப்பாய்
சத்ரு சேனை மூழ்கி மாளும்
ஜெயம் சிறந்தே முன் செல்லுவாய்

குளிர்ந்த ஏலீம் பன்னீருற்றும்
காணுவாய் பேரீச்ச மரம்
கன்மலையில் தாகம் தீர்த்து
மன்னா ருசித்தும் முன் செல்லுவாய்

கசந்த மாரா உன்னைக் கலக்கும்
கஷ்டத்தால் உன் கண் சொரியும்
பின் திரும்பி சோர்ந்திடாதே
நன்மை அருள்வார் முன் செல்லுவாய்

கொடுமை யுத்தம் உன்னை மடக்கும்
கோர யோர்தான் வந்தெதிர்க்கும்
தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால்
தூக்கிச் சுமப்பார் முன் செல்லுவாய்

Kaanaga Pathai Kadum Malaiyum – கானக பாதை காடும் மலையும் Lyrics in English

kaanaka paathai kaadum malaiyum
kaarirulae soolnthitinum
maekasthampam akkini thontum
vaekam nadanthae mun selluvaay

payappadaathae kalangidaathae
paaril Yesu kaaththiduvaar
parama kaanaan virainthu servaay
paramanodentum vaalnthiduvaay

ekipthin paava vaalvai veruththae
Yesuvin pinnae nadanthae
thooya paskaa nee pusiththae
thaeva pelanaal mun selvaay

kadalaip paarum iranndaay pilakkum
koottamaay sente kadappaay
sathru senai moolki maalum
jeyam siranthae mun selluvaay

kulirntha aeleem panneeruttum
kaanuvaay paereechcha maram
kanmalaiyil thaakam theerththu
mannaa rusiththum mun selluvaay

kasantha maaraa unnaik kalakkum
kashdaththaal un kann soriyum
pin thirumpi sornthidaathae
nanmai arulvaar mun selluvaay

kodumai yuththam unnai madakkum
kora yorthaan vanthethirkkum
thaangum karththar ongum kaiyaal
thookkich sumappaar mun selluvaay

song lyrics Kaanaga Pathai Kadum Malaiyum – கானக பாதை காடும் மலையும்

@songsfire
more songs Kaanaga Pathai Kadum Malaiyum – கானக பாதை காடும் மலையும்
Kaanaga Pathai Kadum Malaiyum

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo