Kaarirulil En Nesa Dheebamae – காரிருளில் என் நேச தீபமே Song Lyrics

காரிருளில் என் நேச தீபமே
நடத்துமேன்!
வேறொளியில்லை வீடும்
தூரமே நடத்துமேன்!
நீர் தாங்கின் தூர காட்சி
ஆசியேன்
ஓர் அடி மட்டும் என்முன்
காட்டுமேன்!

2. என் இஷ்டப்படி நடந்தேன்
ஐயோ முன்னாளிலே
ஒத்தாசை தேடவில்லை
இப்போதோ நடத்துமே!
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
வீம்புகொண்டேன்
அன்பாக மன்னியும்!

3. இம்மட்டும் என்னை
ஆசீர்வதித்தீர் இனிமேலும்
காடாறு சேறு குன்றில்
தேவரீர் நடத்திடும்!
உதய நேரம் வரக் களிப்பேன்
மறைந்துபோன
நேசரைக் காண்பேன்!!

Scroll to Top