Skip to content

Kallana Nenjam – கல்லான நெஞ்சம்

கல்லான நெஞ்சம் கரைந்து போகும்
உள்ளான நெஞ்சம் உடைந்து போகும்
உந்தன் கல்வாரி காட்சியை காண்கையிலே
கர்த்தர் இயேசு நீர் பலியானீரே
கொல்கொதா மலைமீதே

ஏனிந்த பாடுகளோ
என் பாவம் சுமப்பதற்கா..?
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே
வாருங்கள் என் அண்டையில்
நான் தருவேன் இளைப்பாறுதல்(2)
என் சுமை லேசானது
என் பாரம் இலகுவானது

ஏனிந்த காயங்களோ
என் நோய்கள் சுமப்பதற்கா..?
சாவையும் நோயையும் நான் ஜெயித்தேன்
சாவாமை உள்ளவர் நான்
என் காயத்தால் சுகமாக்கினேன்
உன் நோய்கள் நான் சுமந்தேன்
என் தழும்பினால் குணமாக்கினேன்

ஏனிந்த வேதனையோ
என் கண்ணீர் துடைப்பதற்கா..?
எருசலேமே என்று நான் அழுதேன்
என்னண்டை சேர்ப்பதற்காக..?
என் ஜீவன் உனக்குத் தந்தேன்
என்னோடு வாழ்வதற்காய்
என்றென்றும் வாழ்வதற்காய்