
கண்ணுக்குள்ளே நீ வளர்த்த – Kannukkulle Nee Valartha Un Pillai Naan

கண்ணுக்குள்ளே நீ வளர்த்த – Kannukkulle Nee Valartha Un Pillai Naan
கண்ணுக்குள்ளே நீ வளர்த்த உன் பிள்ளை நானல்லவா
நெஞ்சுக்குள்ளே நான் வளர்த்த நம்பிக்கை நீயல்லவா
உள்ளங்கையில் வரைந்ததும்
உன்னை என்னுள் வனைந்ததும்
என்னென்று சொல்வேன் உன்னன்பு ஒன்றே
என்றென்றும் என் வாழ்வின் கீதம்
ஆயனைப் போல அன்புத் தோளில் என்னைச் சுமக்கிறாய்
தாயென ஆவலோடு மார்பில் அள்ளி அணைக்கிறாய் (2)
என் உயிரை உன் அருளில் நனைக்கிறாய்
என் உறவில் மலையென நிலைக்கிறாய் (2)
என் உள்ளம் உன்னில் கொண்டுள்ள அன்பில்
அன்பர் பணிசெய்ய அழைக்கிறாய்
காலடி நானமர்ந்து கனிந்த உன் மொழி கேட்கிறேன்
பூவடி தொழுது புனித தடங்கள் நெஞ்சில் சுமக்கிறேன் (2)
உள்ளத்திலே ஒளிர்ந்திடும் உன் விளக்கு
எண்ணத்திலே வளர்ந்திடும் எதிர்நோக்கு (2)
எல்லோரும் நாளும் இன்புற்று வாழும்
நல்லுலகம் ஒன்றே நம் இலக்கு