Kirubaasanaththandai odi vanthen Tamil christian song lyrics

Kirubaasanaththandai odi vanthen Tamil christian song lyrics

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்
கிருபையாய் இறங்கிடுமே (2)
தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே (2)

உம் கிருபை இல்லை என்றால் நான் இல்லை
அதை நீர் நன்றாய் அறிவீர் (2)
தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே (2)

என் சுயபெலத்தால் ஒன்றும் செய்திடேன்
அதை நீர் நன்றாய் அறிவீர் (2)
உம் பெலத்தால் எல்லாம் செய்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே (2)

சோதனைகள் தாங்க பெலனில்லை
அதை நீர் நன்றாய் அறிவீர் (2)
சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க
உம் கிருபையால் நிறைத்திடுமே (2)

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்
கிருபையாய் இறங்கிடுமே (2)
தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே (2)

Scroll to Top