Maa Thooya Aavi Irangum – மா தூய ஆவி இரங்கும்

மா தூய ஆவி இரங்கும்
விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும்
ஞானாபிஷேக தைலம் நீர்
நல்வரம் ஏழும் ஈகிறீர்
மெய் ஜீவன், ஆறுதல், அன்பும்
உம் அபிஷேகம் தந்திடும்
ஓயாத ஒளி வீசியே
உள்ளத்தின் மருள் நீக்குமே
துக்கிக்கும் நெஞ்சைத் தேற்றவே
ஏராள அருள் பெய்யுமே
மாற்றார் வராமல் காத்திடும்
சீர் வாழ்வு சுகம் ஈந்திடும்
பிதா, குமாரன், ஆவியும்
திரியேகர் என்று போதியும்
யுகயுகங்களாகவே
உம் தாசர் பாடும் பாட்டிதே
பிதா சுதன் சுத்தாவி உமக்கே
சதா நித்தியமும் ஸ்துத்தியமுமே

Scroll to Top