
Magil Karthavin Manthayae – மகிழ் கர்த்தாவின் மந்தையே
Deal Score0

1. மகிழ், கர்த்தாவின் மந்தையே
இதோ, கெம்பீரத்துடனே
பரத்துக்குள் அதிபதி
எழுந்து போனதால் துதி.
2. விண்ணோர் குழாம் மகிழ்ச்சியாய்
கொண்டாடி, மா வணக்கமாய்
பணிந்து, இயேசு ஸ்வாமிக்கு
ஆராதனை செலுத்திற்று.
3. கர்த்தாதி கர்த்தர் நமக்கு
தலைவரானார் என்பது
பரத்தின் தூதருக்கெல்லாம்
விசேஷித்த சந்தோஷமாம்.
4. ஆ, இயேசு தெய்வ மைந்தனே,
கர்த்தா, பர்த்தா, முதல்வரே,
அடியார் நெஞ்சு உமக்கு
என்றும் ஆதீனம் ஆனது.
5. விண்ணோரைப் போல் மண்ணோர்களே
நம் ஆண்டவரை என்றுமே
அன்பாகக் கூடிப் பாடுங்கள்,
அவரின் மேன்மை கூறுங்கள்.