1. மலை போன்ற துன்பம் நீக்கும்
விஸ்வாசத்தை எனக்கீயும்
தேவாளுகை ஓங் காசிக்கும்
நேயா! ஜெப ஆவி ஈயும்
உமதன்பால் எனதுள்ளம்
மூழ்க நேசா! ஊற்றும் வெள்ளம்
2. வீணாய்க் காலம் கழிக்காமல்,
என் மீட்பரை அறியாதோர்
இருளில் மாண்டு போகாமல்
மீட்பைப் பெறக் கிருபை கூர்;
பாவாத் மாக்கள் மனம் மாற
நிர்ப்பந்தர் இயேசுவைச் சேர!
3. நானும் என் எல்லாம் உமக்கு
பூசையாய்த் தாறேன் கர்த்தரே
மீட்பர் அன்பறியாதோர்க்கு
இரட்சிப்பைக் கூற இயேசுவே!
மன்னிக்கும் தெய்வத்தைச் சேர!
பாவிகளின் மனம் மாற