Skip to content

MUNNANAI VANTHA VINNAVANAE -முன்னணை வந்த விண்ணவனே

முன்னணை வந்த விண்ணவனே
முன்னுரை வாக்கின் மன்னவனே
ஆடிடைத் தொழுவின் ஆதவனே
தேடியே வந்த தூயவனே

இறைவா வாக்கின்
இறைவா வா
மறையா மறையின்
புதல்வா வா
இருளை நீக்கும்
ஒளியே வா
விடியல் நீட்டும்
மெசியா வா

*

கன்னி ஒருத்தி கருவைத் தாங்கி
உருவம் தருவாள், ஒருவாக்கு
நமக்காய் பாலன் புவியில் பிறப்பான்
ஆட்சி தருவான், ஒருவாக்கு

எப்பி ராத்தா பெத் லேகேமில்
பரமன் பிறப்பான், ஒருவாக்கு
விண்மீன் ஒன்று யாக்கோப் வழியில்
உதித்து ஒளிரும், ஒருவாக்கு

இறைவாக்கு
அதன் நிறைவாகும்
இறைவா
உந்தன் வரவாகும்

மறைவாக்கை
மிகத் தெளிவாக்கும்
இறைவா
உந்தன் வழியாகும்.

*

ஈசாய் அடிமரம் துளிரை விடுக்கும்
கனியை கொடுக்கும், ஒரு வாக்கு
எகிப்தில் இருந்து மகனை அழைத்தேன்
மீட்பை அளிக்கும், ஒரு வாக்கு

செங்கோல் யூதா வம்சம் தன்னை
நீங்கா திருக்கும், ஒருவாக்கு
பாம்பின் தலையை காலால் நசுக்கும்
பரமன் பிறப்பான், ஒருவாக்கு

இறைவாக்கு
அதன் நிறைவாகும்
இறைவா
உந்தன் வரவாகும்

மறைவாக்கை
மிகத் தெளிவாக்கும்
இறைவா
உந்தன் வழியாகும்.