நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்
அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2)
நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவ காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திடுவேன்
1. கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்
படகாய் வந்திடுவார்
இருள்தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார்
2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவர் ஆகிடுவார்
மயங்கி விழும் பசிதனிலே
மன்னாவைத் தந்திடுவார்
3. நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
நான் இனிக் கலங்கிடேனே
எந்தனுக்குக் காவல் அவர்
நான் உடல் அவர் உயிரே
- #motivationalquotes #biblemotivation #christianmedias…
- Ethai Ninaithum – எதை நினைத்தும்
- Agar Hamako Tera Song lyrics – अगर हमको तेरा
- Anugrah Ka Tere Prabhu song lyrics – अनुग्रह का तेरे प्रभु
- Mera Priy Daayaan Haath Pakadakar मेरा प्रिय दायाँ हाथ पकड़कर Song Lyrics
Naan Nesikkum devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு