
naanum en veetarumovendral lyrics – நானும் என் வீட்டாருமோவென்றால்

naanum en veetarumovendral lyrics – நானும் என் வீட்டாருமோவென்றால்
நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா – நீயும் சேவிப்பாயா?
1.கர்த்தரையே சேவிப்பது
ஆகாத தென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாய் யென்பதை
இன்றே தீர்மானம் செய்வாய்
2.அடிமையான நம்மையுமே
தேவாதி தேவன் மீட்டார்
மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட
கர்த்தரை சேவிப்பாயா?
3.நம் பாதையில் காப்பாற்றியே
கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா?
4.நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சப்தம் கேட்டு
சாட்சியாய் ஜீவிப்பாயா?