1. நல் மீட்பர் இயேசு நாமமே
என் காதுக்கின்பமாம்
புண்பட்ட நெஞ்சை ஆற்றவே
ஊற்றுண்ட தைலமாம்.
2. அந்நாமம் நைந்த ஆவியை
நன்றாகத் தேற்றுமே;
துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை
திடப்படுத்துமே.
3. பசித்த ஆத்துமாவுக்கு
மன்னாவைப் போலாகும்!
இளைத்துப் போன ஆவிக்கு
ஆரோக்கியம் தந்திடும்.
4. என் ரட்சகா, என் கேடகம்,
என் கோட்டையும் நீரே!
நிறைந்த அருள் பொக்கிஷம்,
அனைத்தும் நீர்தாமே.
5. மா நேசர், மேய்ப்பர், பர்த்தாவும்,
என் ஜீவனும் நீரே;
என் தீர்க்கரும், என் ராஜாவும்
ஆசாரியருமே.
6. என் நெஞ்சின் ஊக்கம் அற்பந்தான்,
என் அன்பில் குளிர்ந்தேன்!
உன் முகம் பார்க்கும்போதோ, நான்
சீராகப் போற்றுவேன்.
7. இம்மையில் ஆயுள் முழுதும்
உம் அன்பைக் கூறுவேன்;
உம் நாமத்தால் என் சாவிலும்
நான் ஆறித் தேறுவேன்.
Nal Meetpar Yesu Naamamae – நல் மீட்பர் இயேசு நாமமே Lyrics in English
1. nal meetpar Yesu naamamae
en kaathukkinpamaam
punnpatta nenjai aattavae
oottunnda thailamaam.
2. annaamam naintha aaviyai
nantakath thaettumae;
thukkaththaal thoyntha ullaththai
thidappaduththumae.
3. pasiththa aaththumaavukku
mannaavaip polaakum!
ilaiththup pona aavikku
aarokkiyam thanthidum.
4. en ratchakaa, en kaedakam,
en kottaைyum neerae!
niraintha arul pokkisham,
anaiththum neerthaamae.
5. maa naesar, maeyppar, parththaavum,
en jeevanum neerae;
en theerkkarum, en raajaavum
aasaariyarumae.
6. en nenjin ookkam arpanthaan,
en anpil kulirnthaen!
un mukam paarkkumpotho, naan
seeraakap pottuvaen.
7. immaiyil aayul muluthum
um anpaik kooruvaen;
um naamaththaal en saavilum
naan aarith thaeruvaen.
song lyrics Nal Meetpar Yesu Naamamae – நல் மீட்பர் இயேசு நாமமே
@songsfire
more songs Nal Meetpar Yesu Naamamae – நல் மீட்பர் இயேசு நாமமே
Nal Meetpar Yesu Naamamae