
Nambikkai Pongal song lyrics -செம்மண்ண விளைய செய்து

Nambikkai Pongal song lyrics – செம்மண்ண விளைய செய்து
கருமண்ண தழைக்க செய்து
புசித்து திருப்தி அடைய செய்தாரே
ஆத்து தண்ணி வத்தினாலும்
சேத்து மேல கால வைக்க
வானத்தையே திறந்து விட்டாரே
எங்க நிலமெல்லாம் நனைஞ்சாச்சி
தன்னா தன்னா தானே
பயிர் எனக்காக முளைச்சாச்சு
தன்னா தன்னா தானே
சொல்லுறேன் கேட்டுக்கோ எங்க நிலம் அழியாது
ஏன்னா என்னன்னா அப்பா குணம் அப்படித்தான் பா
1. களத்துக்குள்ள நம்பிக்கையா கால வைப்போமே
எங்க காளையனும் மிதிக்க தொடங்குவான்
விதையெல்லாம் சந்தோசமா வளர தொடங்குமே
எங்க சனத்தோட வயிறு நிரம்புமே
பால் கொடுக்கிற பசுவும் கூட பைய பைய மிதிக்குதே
நெல்மணிய நெனச்சு பாக்குதே
வானம் பார்த்து நின்னோமே ஆண்டவர பாத்தோமே
அமுக்கி குலுக்கி சரியா செய்தாரே
எதுனாலும் எதுவானாலும் நாங்க அவர நம்புவோம்
நிறைவேதும் குறையாம
எங்களை பார்த்துக்கொள்வாரு
2. கண்ணீர் விட்ட காலமெல்லாம் மாறிப்போச்சுது
எங்கள கெம்பீரமா நடக்க செய்தாரே
எங்க அப்பாவ தான் நம்பி இருந்தோம் மனசு மாறல
எங்கள செழிப்பாக மாற்றி விட்டாரே
வண்டி வண்டியா நெல்லு தானே வருகுதய்யா
அரண்மனையா மாற்றிவிட்டாரே
களஞ்சியத்தை பாக்கவே கோடி கண்ணு போதாதே
வீடெங்கும் நெல்லா கிடக்குதே
எதுனாலும் எதுவானாலும் நாங்க அவர நம்புவோம்
நிறைவேதும் குறையாம எங்களை பார்த்துக்கொள்வாரு
Nambikkai Pongal lyrics songs,Nambikkai Pongalsong lyrics, Nambikkai Pongal song lyrics- செம்மண்ண விளைய செய்து