
Neer Thantha Nanmai song lyrics – நீர் தந்த நன்மை

Neer Thantha Nanmai song lyrics – நீர் தந்த நன்மை
1. நீர் தந்த நன்மை யாவையும்
நினைத்து, கர்த்தரே,
மகிழ்ச்சியோடு என்றைக்கும்
நான் துதி செய்யவே.
2. குழந்தைப் பருவமுதல்
குறைவில்லாமலே
எனக்களித்த நன்மைகள்
ஏராளமானதே.
3. என்னோடு வாலிபத்திலும்
இருந்தீர் தேவரீர்
இக்கட்டுண்டான காலத்தும்
விழாமல் தங்கினீர்.
4. அநேகமான தீமைகள்
அண்டாமல் தடுத்தீர்
கைம்மாறில்லாத நன்மைகள்
கர்த்தாவே பொழிந்தீர்.
5. இம்மையில் என்றும் தாழ்மையாய்
தெய்வன்பை நினைப்பேன்;
மறுமையில் வணக்கமாய்
உம்மையே போற்றுவேன்.
6. புகழ்ச்சி, துதி, தோத்திரம்
ஒன்றான உமக்கே
இகத்திலும் பரத்திலும்
எழும்பத் தகுமே.