New Tamil Christmas Songs|Tamil New Year song|Entrance|Aandavar|Fr.Jerald Benjamin|X.Paulraj|Sandra
Contact details: Whatsapp +33751451320
Tami Christian Songs
Tamil Christmas Sogs
Song: Aandavar Padaitha Naal
Album: Idho Nam Messiah
Singer: Sandra
Lyrics & Music: Fr. Jerald Benjamin
Music Direction & Vedio Making: X. Paulraj
Sound Engineer: M. John Nirmal
Recording Studio: Paul X Sounds, Chennai
Produced by: JayaMary Creations
Dedicated to: Aumônerie Catholique Tamoule Indienne de France
Special Thanks to: Families, Rev. Fr. S. John Kennedy, Friends & Sponsors, France
*புத்தாண்டு வருகைப் பாடல்*
*பல்லவி*
ஆண்டவர் படைத்த நாள் இதுவே அருள்தனைத் தருகின்ற நாள் இதுவே -2
புதிய வானம் புதிய பூமி மலரும் நாள் இதுவே புதிய உள்ளம் புதிய மனம் காணும் நேரமிது
அவர் இல்லம் சென்று அவரை வணங்குவோம் அவர் பெயர் சொல்லி அவரை வாழ்த்துவோம் -2
*சரணம் 1*
உலகம் தோன்றும் காலம் முன்பே கிறிஸ்து வழியாய் நமைத் தேர்ந்தார்
அவரின் வழியாய்
தம் மக்களாக அன்பினாலே முன் குறித்தார்
அவர் வழியாக அருளைத் தந்தார் திருவுளப்படியே அனைத்தும் செய்தார்
ஞானத்தையும் அறிவையும்
நமக்குத் தந்தார் மறைபொருள் அனைத்தையும் நமக்குச் சொன்னார் -2
*சரணம் 2*
கிறிஸ்து வழியாய் தமது திட்டத்தை கடவுளே இன்று நிறைவேற்றினார்
அவரே நமது உள்ளத்திலே தங்கி வல்லமையோடு செயல்படுவார்
அவர் வழியாக அனைத்தும் தந்தார் அவரின் மாட்சியில் பங்கும் தந்தார்
கிறிஸ்துவில் நம்பிக்கையை நாம் வைப்போம் கடவுளின் மாட்சியை புகழ்ந்து சொல்வோம் -2