
Paathakanaai naa nalaithean – பாதகனாய் நானலைந்தேன்
Deal Score0

1. பாதகனாய் நானலைந்தேன்
பாவியென்றுணரா திருந்தேன்
தத்தளிக்கும் ஏழை வந்தேன்
சத்தியரே யாவும் தந்தேன்
2. மன்னா உந்தன் விண்ணை விட்டு
மண்ணில் வந்து பாடுபட்டு,
மரித்தடக்கம் பண்ணப்பட்டு
உயிர்த் தெழுந்தீர் என்னை யிட்டு
3. உந்தன் பாடு கஸ்தியால் தான்
வந்த தெந்தன் பாக்கிய மெல்லாம்
இம்மைச் செல்வம் அற்பப் புல்லாம்
உம்மைப் பெற விட்டே னெல்லாம்
4. சிரசுக்கு முள்ளால் முடி,
அரசின் கோல் நாணல் தடி!
நீர் குடிக்கக் கேட்டீர்! ஓடி
ஓர் பாதகன் தந்தான் காடி
5. கெத்சமனே தோட்டத்திலே
கஸ்தி பட்ட என் அண்ணலே!
அந்த ஆவி உள்ளத்திலே
வந்தால் வெல்வேன் யுத்தத்திலே