Paavaththin Paaraththinaal- பாவத்தின் பாரத்தினால் song lyrics

1.பாவத்தின் பாரத்தினால்
தவித்திடும் பாவி என்னை
நின் கிருபை பிரவாகத்தால்
தேற்றிடும் இயேசுநாதா

  1. கெட்ட குமாரனைப்போல்
    துஷ்டனாய் அலைந்தேனப்பா
    நின் அன்பை உணராமல்
    துரோகம் நான் செய்தேனே
  2. தந்தையை விட்ட பின்பு
    தவிடுதான் ஆகாரமோ
    மனங்கசிந்து நொந்தேன்
    கண்ணீரைத் துடைத்திடுமே
  3. கள்ளனாயினும் நான்
    நீர் பெற்ற பிள்ளையல்லோ
    கள்ளனுக்கருள் செய்த நீர்
    தள்ளாதே சிலுவைநாதா
  4. தந்தை, தாய் தமரெல்லாம்
    என்னைக் கைவிடுவார்கள்
    சாகும் நாளில் தாங்குவார்
    நீரல்லால் யாருமில்லை!
https://www.youtube.com/watch?v=VdfB4s7US70
Scroll to Top