Piranthar Piranthar Iraimagan Piranthar -பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார்
வானவர் நல்வாழ்த்து பாட
புவி மாந்தர்கள் நல்வாழ்வு வாழ
மரியின் மடியில் ஆயிடை குடிலில்
மகிமையின் ரூபமாக….. மனுகுலத்தில் மனிதனாக

மேசியா தேவன் நீரே மகிமையில் இறங்கினீரே
மண்ணிலே தேவ ராஜ்யம் தந்தையின் சித்தம் போலே
தேவகுமாரா….. எம்மை ஆளும்…. மனித குமாரா….. எம்மை மீளும்

இருளிலே வாழும் மனிதர் ஒளியிலே வந்து சேர
பாவங்கள் சாபமெல்லாம் பனியை போல் மாய்ந்து போக
உன்னதத்தில்… மகிமையே….. பூமியிலே…. சமாதானமே

Scroll to Top