Skip to content

Piranthar Piranthar Nam Yesu paalagan – பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார்
புகழ்வோம் மகிழ்வோம் போற்றி வணங்குவோம்
இறைவனின் அருள் பெறுவோம்
இறைவன் மகிமை உலகின் உன்னத மகிமை

எளியோர்கள் மகிழ்ந்திடவே
ஏழைகள் நெஞ்சில் நிலைத்திடவே
இருள் நீக்க வந்தார்
ஒளி ஏற்ற வந்தார்
புது வாழ்விற்கு வழி வகுத்தார்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்
நாம் இறைவனின் அருள் பெறுவோம்

விண்ணாழும் மன்னவனாம்
மாட்டுதொழுவத்தில் பிறந்தாராம்
அரசாள வந்தார் புவிகாக்க வந்தார்
எதிர்காலங்கள் கணிக்க வந்தார்
நாடெங்கும் செழிக்க வாழ்வெல்லாம்
இனிக்க நாள்தோறும் வணங்கிடுவோம்
நாம் இறைவனின் அருள் பெறுவோம்

https://www.youtube.com/watch?v=kTOeN2HcnmA