
Pithavae balam Eenthidum – பிதாவே பலம் ஈந்திடும்

Pithavae balam Eenthidum – பிதாவே பலம் ஈந்திடும்
1.பிதாவே பலம் ஈந்திடும்
என் வாழ்க்கை கஷ்டமாயினும்
மெய் ஊற்றத் தோடு பாடவும்
உம் சித்தமே
2.என் கோழை நெஞ்சைத் தேற்றிடும்
எச்சக்தி சார்பு சாயினும்
உம் அன்பு வன்மை மேற்கொள்ளும்
உம் சித்தமே.
3.பணிவாய் உம்மைப் பற்றுவேன்
கதவாய் சேவை ஆற்றுவேன்
எவ்வேலை தன்னில் சாற்றுவேன்
உம் சித்தமே.
4.நீர் ஏவி பாதுகாத்திட
உம் ஞானம் பாதை காட்டிட
கூடும் எச்செய்கை
ஆற்றிட
உம் சித்தமே.
5.நான் அல்ல நீர்தாம் என்றுமே
உம் சர்வ சக்தி என்னிலே
உம் ஆணை ஆஞ்சை எனக்கே
உம் சித்தமே
6. என் ஆயுள் மகிழ் பொங்கிடும்
சா, நோவு பாவம் ஓய்ந்திடும்
விஸ்வாசம் அன்பு வென்றிடும்
உம் சித்தமே