
Por Purivom Naam Por – போர் புரிவோம்நாம் போர்

Por Purivom Naam Por – போர் புரிவோம்நாம் போர்
பல்லவி
போர் புரிவோம்! நாம் போர் புரிவோம்! நாம்
வெற்றி பெறுமட்டும் நின்று போர் புரிவோம்
சரணங்கள்
1. என்னென்ன வந்தாலும் பின்னிட்டுப் பாராமல்
தன்னை முற்றுமே கொன்று தாழ்மையோடே,
விண்ணை மறந்திடாமல் முன்னோக்கியே எந்நாளும்
சந்தோஷமாய் யுத்தம் செய்குவோமே! – போர்
2. இரட்சகர் பாதையில் பட்சமாய் நாம் சென்றால்
நிச்சயமாய் என்றும் ஜெயித்திடுவோம்;
அட்சயன் மக்கள் தான் சிட்சை யுறாமலே,
பட்சிக்கும் பேயை நாம் கட்சியிட்டகற்றி! – போர்
3. தேவனுக்காகவே துணிந்து துக்கமில்லாமல்,
ஆவலாய் அவருக்கே தொண்டு செய்து,
ஜீவனைப் பேணாமல் ஜாக்ரதையாகவே
ஆவியைப் பெற்று நாம் ஆனந்தமாக! – போர்