Ratchaniya Senai Veerarae Naam – இரட்சணிய சேனை வீரரே நாம்

பல்லவி
இரட்சணிய சேனை வீரரே நாம்
எல்லோரும் கூடுவோம்!
அனுபல்லவி
பட்சமுடன் தேவன் தமக்குச் செய்த
நன்மையைக் கொண்டாட
சரணங்கள்
1. பட்சிகள், விலங்கு, ஊர்வன ஜீவன்கள்
பசியாறிப் பிழைக்க,
பசுமையாகப் புற்பூண்டு விருட்சங்கள்,
பார் தழைத் தோங்கியதே – இர
2. விதைத்த விதைகள் முளைக்க மழையை
மிதமாக பொழிந்து,
விந்தையாகப் பயிர் ஏற்ற காலத்தில்
விளையச் செய்தாரே – இர
3. ஒற்றைத் தானியம் ஓங்கி வளர்ந்து,
ஒன்பது நூறாக
வர்த்தனை யாக்கியன வல்லமைத் தேவனை
வாழ்த்திப் புகழ்ந்திடுவோம் – இர
4. அழுகையோடு நாம் நிலத்தை விதைத்து
அநேக நாள் உழைத்து
அறுத்துப் போர்தனை அடித்துப் புசித்து
ஆனந்தம் கொண்டோமே – இர
5. தானியம் பண்டகசாலையிற் சேரும்
தகைமையைப் போல
வானவரறுப்பில் மாளிகை சேரும்
மணிகள் போலிருப்போம் – இர

Exit mobile version