
Sabaiyae Indru Vaanathai song lyrics – சபையே இன்று வானத்தை
Deal Score0

Sabaiyae Indru Vaanathai song lyrics – சபையே இன்று வானத்தை
1.சபையே இன்று வானத்தை
திறந்து தமது
சுதனைத் தந்த கர்த்தரை
துதித்துக் கொண்டிரு
2.பிதாவுக்கொத்த இவரே
குழந்தை ஆயினார்
திக்கற்று முன்னணையிலே
ஏழையாய்க் கிடந்தார்
3.தெய்வீக ஸ்பாவம் நம்மிலே
உண்டாக ஆண்டவர்
நரரின் சாயலாய் இங்கே
வந்து பிறந்தனர்.
4.தாழ்ந்தார் அவர் உயர்ந்தோம் நாம்
இதென்ன அற்புதம்
இதுன்னத சிநேகம் ஆம்
அன்பதின் பூரணம்.
5. திரும்பப் பரதீசுக்கு
வழி திறந்துபோம்
கேரூபின் காவல் நீங்கிற்று
மகிழ்ந்து பாடுவோம்.