Sakkarai Muthe Santhana Pottu சக்கரை முத்தே சந்தன பொட்டே Christmas Carols HD Video Song

Sakkarai Muthe Santhana Pottu சக்கரை முத்தே சந்தன பொட்டே Christmas Carols HD Video Song

ஆரிராரிரோ……… ஆரிராரிரோ……. ஆரிராரிரோ……… ஆரிராரிரோ…….
சர்க்கரை முத்தெ சந்தண பொட்டே கண்ணே கண்ணுறங்கு
முத்தமிழ் சொத்தே முல்லை பூ மொட்டு கண்ணே கண்ணுறங்கு
அன்னை மரியின் செல்வமே விண்ணக தேவ திலகமே கண்ணே நீயும் கண்ணுறங்கு
ஆரிராரிரோ……… ஆரிராரிரோ……. ஆரிராரிரோ……… ஆரிராரிரோ…….

கந்தையில் நீயும் மகிமை கண்டாய் கண்ணே கண்ணுறங்கு
தந்தையின் அன்பை எமக்கு தந்தாய் கண்ணே கண்ணுறங்கு
மந்தையின் ஆயர்கள் தோழமை கொண்டாய் கண்ணே கண்ணுறங்கு
விந்தையில் வந்து வேந்தர்கள் நின்றாய் கண்ணே கண்ணுறங்கு
ஆரிராரிரோ……… ஆரிராரிரோ……. ஆரிராரிரோ……… ஆரிராரிரோ…….

விண்ணிலே தூதர் கீதங்கள் கேட்க கண்ணே கண்ணுறங்கு
மண்ணிலே மாந்தர் நாதங்கள் சேர்க்க கண்ணே கண்ணுறங்கு
கண்கவர் விண்மீன் உன்புகழ் பாட கண்ணே கண்ணுறங்கு
தென்றலும் மெல்லிய தேனிசை மீட்ட கண்ணே கண்ணுறங்கு
ஆரிராரிரோ……… ஆரிராரிரோ……. ஆரிராரிரோ……… ஆரிராரிரோ…….
Try Amazon Fresh

Scroll to Top